மகனை கடித்த பாம்பை... கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்த தாய் - அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகனைக் கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து, மருத்துவமனைக்குக் கொண்டு வந்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்ற சிறுவன் வீட்டின் அருகே குப்பை கொட்ட சென்றுள்ளார்...

அங்கு குப்பைக்குள் மறைந்திருந்த பாம்பு ஒன்று பூவரசனை கடித்துள்ளது. வலியில் பூவரசன் அலறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தனர்.

பூவரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனின் தாயார் பாட்டிலில் அடைக்கப்பட்ட பாம்புடன் மருத்துவமனை வந்துள்ளார்.

இதைக் கண்டு அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் அலறியடுத்து ஓடினர்.

https://youtu.be/VJgnyGYEDYwசிலர் அதை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்... இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்