வீட்டுக்கு வந்த தாய், தந்தை...மகன் செய்த அதிர்ச்சி காரியம்..!தந்தைக்கு நேர்ந்த விபரீதம்

x

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, சொத்துக்காக தந்தையை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ரவி - வள்ளி தம்பதிக்கு, மலர் என்ற மகளும், குமரேசன் என்ற மகனும் உள்ளனர். குமரேசனுக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே, தளிக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் வீடு தொடர்பாக, தந்தை மற்றும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகனின் வீட்டிற்கு வந்த ரவி - வள்ளி தம்பதி, மருமகளிடம் வீடு தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது அங்கு வந்த குமரேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் தந்தையும் மகனும் மது அருந்தியதாக கூறப்படும் நிலையில், வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த குமரேசன், அருகில் இருந்த கட்டையைக் கொண்டு, தாய் மற்றும் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தாய் வள்ளி படுகாயமடைந்த நிலையில், தந்தை ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள குமரேசனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்