மும்மதத்தினரும் இணைந்து கட்டிய பள்ளிவாசல்...மனிதம் போதும்..பேதங்கள் மறந்த அதிசய கிராமம் - இது தான் தமிழ்நாடு

x

கோயில்... கோயிலுக்கு பக்கத்திலேயே பள்ளி வாசல்... அதற்கும் மிக அருகாமையில் தேவாலயம்... என்று இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தினர் எவ்வித சண்டை சச்சரவுகளுமின்றி அமைதியாய் மகிழ்ச்சியுடன் வசித்து வருகின்றனர்...

இந்த ஊரில் இருந்த பள்ளிவாசல் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது...

வருடங்கள் உருண்டோட, பள்ளி வாசல் கட்டடம் சிதிலமடையவே, இஸ்லாமியர்கள் புதிய பள்ளிவாசல் கட்டும் பணிகளைக் கடன்ஷ வருடம் துவங்கினர்...

உடன் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கைகோர்க்க, 70 லட்ச ரூபாய் செலவில் உருவாகியுள்ளது இந்த பிரம்மாண்டமான முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல்..

திறப்பு விழாவான இன்று கிராம மக்கள், இந்து கோயிலில் வழிபாடு செய்து, சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து ஒன்று கூடி ஒரு திருவிழாவைப் போல பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்...

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கந்தரி எனும் அன்னதானம் வழங்கப்பட்டது...

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக தமிழன் என்ற போர்வைக்குள் கைகோர்த்து மகிழ்ச்சியாக விழாவை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்