எம்மாடி..! கார்த்திகை மாசமே இவ்வளவு பனியா..! - திண்டாடும் தமிழக மக்கள் | Snow fall

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் காலை 8 மணி கடந்தும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. மார்கழி மாதத்தில் தொடங்கும் பனிப்பொழிவு கார்த்திகை மாதமே அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டில் முடங்கினர்.

விழுப்புரத்திலும் காலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு சாலை முழுவதும் பனி படர்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து சென்றன.

ஒசூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளிலும் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் மற்ற நாட்களை விட இன்று காலை குளிர் மற்றும் பனி அதிகரித்து காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்