மீண்டும் வருகிறான் உயிர் குடிக்கும் 'அரக்கன்'.."என் பிள்ள பைத்தியம் ஆகி செத்துட்டான்" - கதறும் பெற்றோர்கள்
இந்தியாவில் கடந்த ஜூலையில் தடை விதிக்கப்பட்ட பப்ஜிக்கான தடையை மத்திய அரசு விலக்கியிருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பப்ஜி அனுமதி காலங்களில், செயலியில் கட்டுமஸ்தமான தேகம், ஆயுதங்களை வாங்க சிறுவர்கள் தாய், தந்தையின் வங்கி கணக்கை காலி செய்த கதை ஏராளம். அதுவே விளையாடவிடாத போது பெற்றோரை சிறுவர்கள் கொலை செய்ததும், தற்கொலை செய்துக் கொண்டதும் பெரும் துயரம்...
இப்போது மீண்டும் தடை நீக்கம் என்பது இதுபோன்ற சூழலையே உருவாக்கும் என கண்ணீர் வடிக்கிறார்கள் பெற்றோர்.. ஏற்கனவே பப்ஜியால் தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர், இதனை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கிறார்கள்..
சுசிகரன், கோவில்பட்டி
"ஒரு பெக் என தொடங்கி 6 பெக்காக அதிகரிக்கிறது"
"அடிமையாவதை எப்படி கட்டுப்படுத்த முடியும்"
பப்ஜிக்கு கட்டுப்பாடு - மனநல ஆலோசகர் கேள்வி மறுபுறம் சமூக வலைதள பயன்பாடு, மதுபானம் அருந்துதலை சுட்டிக்காட்டும் மனநல ஆலோசகர் நப்பின்னை, எப்படி கட்டுப்படுத்துவீர்கள் என கேள்வியை எழுப்புகிறார்.
நப்பின்னை, மனநல ஆலோசகர்
"ஆன்-லைன் விளையாட்டால் சமூகத்தை அறியமாட்டார்கள்"
"யார் ஏமாற்றுவார் என குழந்தைகளுக்கு தெரியாமல் போகும்"
பெற்றோருக்கு மனநல ஆலோசகர் எச்சரிக்கை
இன்று குழந்தைகளிடம் பெற்றோர்கள் செல்போன், மின்னணு சாதணங்களை வழங்குவது அவர்களை பலமற்றவர்களாக்கும், யார் ஏமாற்றுகிறார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியாமல் போகும் என எச்சரிக்கிறார்.