திருப்பதி கோவிலில் அரங்கேறிய அற்புதம்..வாடகை தாய் மூலம் ஈன்றெடுக்கப்பட்ட உயர்ரக பசு..இந்த முறை எப்படி சாத்தியம் ?

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாடகை தாய் மூலம் பசு ஒன்று கன்றை ஈன்றுள்ள அபூர்வ சம்பவம் அரங்கேறியுள்ளது. பசுக்களில் வாடகை தாய் முறை எப்படி சாத்தியம் ?... அதன் பின்னணி என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

குழந்தைப்பேரு இல்லாததால் வாழ்க்கையே இருண்டு விட்டதாய் முடங்கி கிடந்தவர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றிய ஆச்சரிய கண்டுபிடிப்பு வாடகை தாய் முறை...

கருவுற முடியாத தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாகவும், அறிவியலின் அடுத்தக்கட்ட நகர்வாகவும் பார்க்கப்பட்ட வாடகை தாய் முறையை அறிவியல் அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.

மனிதர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த கண்டுபிடிப்பு, தற்போது அரியவகை இனங்களை பாதுகாக்கும் முயற்சியாகவும், மேம்படுத்தப்பட்ட விலங்குகளை உருவாக்கவும் விலங்குகளிடத்திலும்

இந்த முறை செயல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆந்திராவின் பாரம்பரிய இனங்களான ஓங்கோல், புங்கனூர் ஆகியவை அரிதாகி வருகின்றன.

இந்த இன பசுக்களின் பால் மட்டுமே மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய்வேத்திய சமர்ப்பணங் களுக்கு பயன் படுத்தப்படுகின்றன.

இந்த பயன்பாட்டிற்காக ஏழுமலையான் கோவிலில் 500 நாட்டு பசுக்கள் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக அதிக பால் உற்பத்தி கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகைத்தாய் முறையில் கலப்பினங்களாக உற்பத்தி செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.

இது தொடர்பாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் ஆய்வகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன் படி, வட மாநிலங்களில் உள்ள உயர்ரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் கொண்டு வரப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கப்பட்டன.

அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயர்ரக நாட்டு பசுக்களின் கருப்பப்பையில் செலுத்தி திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வளர்த்து வருகின்றனர்.

இதில் ஒரு பசு சாகிவால் இனத்தை சேர்ந்த உயர் ரக கன்றை ஈன்றுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக வாடகை தாய் மூலம் பிறந்த கன்றுக்கு பத்மாவதி என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

வாடகை தாய் மூலம் பிறந்த ஒரு கன்றை கண்டு நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்க, அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர் ரக சாகிவால் கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் 2022ம் ஆண்டு உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவின் ஓஹியோ உயிரியல் பூங்காவில், இஸ்ஸி என்ற சிறுத்தை வாடகை தாய் முறை மூலம் 2 சிறுத்தை குட்டிகள் ஈன்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்