16 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர்... கிணற்றில் குதித்து கிராமத்து குளியல் - தேர்தல் பணிகளை தொடங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் பொறுப்பாளராக, திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொண்டுவரும் அவர், சென்னிமலை பகுதியில் 16 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு, உடற்பயிற்சியின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தினார். மேலும், அவர் தங்கியிருந்த பகுதியின் அருகே இருந்த கிணற்றில் குதித்து, நீச்சல் அடித்தபடி ஆனந்த குளியல் போட்டார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story