முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்... நாடே தண்டிக்க சொல்லும் நேரத்தில் விடுதலை செய்ய சொன்ன இளைஞர்

x

மத்தியப்பிரதேசத்தில், சிறுநீர் கழித்த விவகாரத்தில் பா.ஜ.க. பிரமுகரை விடுதலை செய்ய வேண்டுமென, பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி பகுதியில், பழங்குடியின இளைஞர் மீது பா.ஜ.க. பிரமுகர் பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரை, தனது இல்லத்திற்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்து, பாதங்களை கழுவி மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், பர்வேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அவரது தவறுக்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் பழங்குடியின இளைஞர் தெரிவித்தார். மேலும், தங்கள் கிராமத்தின் பண்டிதராக இருப்பதால், பர்வேஷ் சுக்லாவை, அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்