சவுக்கு சங்கரின் வீடியோக்களை நீக்குவது குறித்த விவகாரம்-"உயர் நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு தேவை"-சமூக வலைதள நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் வாதம்

x

சவுக்கு சங்கரின் வீடியோக்களை நீக்குவது குறித்த விவகாரம்-"உயர் நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு தேவை"-சமூக வலைதள நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் வாதம்

பேஸ்புக், யூடியூப்பில், தனி நபரின் பதிவுகளை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் நீக்க முடியாது என, சமூக வலைதளங்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் குறித்து சவுக்கு சங்கர் பேசிய வீடியோக்களை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான பேஸ்புக், ட்விட்டர் நிறுவன வழக்கறிஞர்கள், தனிப்பட்ட ஒரு பதிவை நீக்க வேண்டும் என்றால், நீதிமன்றம் உத்தரவு பிறக்க வேண்டும், தாங்களாக நீக்க முடியாது என வாதிட்டனர். இதைத் தொடர்ந்து, வீடியோ பதிவு செய்பவர்கள், அதற்கு பதில் அளிப்பவர்கள் யார் என கண்டறிய முடியுமா? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, வலைதளங்களில் பதிவிடுவதற்கு முன்பாக என்ன விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோ, அதை மட்டுமே பார்க்க முடியும் என, வழக்கறிஞர்கள் பதிலளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்