என்னா கோபம்.. சொகுசு விடுதியை சல்லி சல்லியா நொறுக்கிய நபர் - அதிர்ச்சி காட்சி | villupuram
விழுப்புரம் மாவட்டம் தந்திராயன்குப்பத்தில் தனியார் சொகுசு விடுதியில் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தந்திராயன்குப்பம் கடற்கரை எதிரே பிரான்சில் வசித்து வருபவருக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. இந்நிலையில், விடுதிக்குள் புகுந்த நபர் ஒருவர், கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தார். இதனால், விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். போலீசாரின் விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் பெங்களூரைச் சேர்ந்த ரூபன் பெர்னாண்டஸ் என்பதும், பணம் விவகாரத்தில் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது.
Next Story