பக்கத்து வீட்டு பாட்டியை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த நபர் | Thiruvennai nallur

x

திருவெண்ணைநல்லூர் அருகே மூதாட்டி காணாமல்போன வழக்கில், திடீர் திருப்பமாக நகைக்காக அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி, கடந்த 19ம் தேதி முதல் மாயமானதாக, அவரது மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரது வீட்டில், அப்பகுதி மக்கள் சந்தேகத்தின்பேரில் சோதித்தபோது, மூதாட்டி குழித் தோண்டி புதைக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்பேரில் வந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு விசாரித்தபோது, சிவசங்கர் 10 சவரன் நகைக்காக, மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலை தனது வீட்டிலேயே புதைத்ததும் அம்பலமாகியுள்ளது. தலைமறைவாக உள்ள சிவசங்கரை போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்