குறைந்தது தக்காளி விலை.. முதலிடத்தில் எது தெரியுமா.?
கோயம்பேடு சந்தைக்கு 550 டன் அளவு தக்காளி வந்த நிலையில் விலை கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 100 ரூபாயாக விற்கப்படுகிறது.
நேற்று 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று 20 ரூபாய் குறைந்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் நேற்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் இன்று அதிகபட்சமாக 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளை, காலிஃப்ளவர், மாங்காய், கீரை வகைகள் 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட், பாகற்காய், அவரை 50 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட் 20 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட், முருங்கை, எலுமிச்சை 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கர்நாடக பீட்ரூட், கருவேப்பிலை, வரி கத்திரி, கருவேப்பிலை 25 ரூபாய்க்கும், தேங்காய் 27 ரூபாய்க்கும், வெண்டை, உஜாலா கத்திரி 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 65 ரூபாய்க்கும்,பட்டாணி 190 ரூபாய்க்கும், இஞ்சி 230 ரூபாய்க்கும், பூண்டு 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.