குட்டையில் குதித்த காதலன்; கிணற்றில் குதித்த காதலி - அடுத்தடுத்து உயிரை விட்ட காதல் ஜோடி

x

குடியாத்தம் அருகே அடுத்தடுத்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். 26 வயதான இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் நெல்லூர் பேட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினரான ரீட்டா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அஜித்குமார் அங்குள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதலனின் மரண செய்தியை கேட்டு அதிர்ந்து போன ரீட்டா தன் வீ​ட்​டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரின் தற்கொலை முடிவும் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்