காதலித்து ஏமாற்றிய காதலன்... சாலை மறியலில் ஈடுபட்டபெண்.. தீக்குளிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு
திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலன் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்து, இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். முத்துப்பேட்டைதெற்குக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகள் அருணா, 4 ஆண்டுகளாக காதலித்து வந்த மதன்ராஜ் என்பவர் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி, அவரை கைது செய்யக் கோரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காவல் நிலையம் அருகே அவர் சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடைய தந்தை சந்திரசேகர், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story