வீடு தேடி வாழ்த்து சொல்ல வந்த காதலன்... மூச்சை நிறுத்திய தந்தை - மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்த காதலி
காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற அவரது வீட்டுக்கு சென்ற காதலனை, பெண்ணின் உறவினர் அடித்து கொன்ற சம்பவத்தில், மனவேதனையில் இருந்த காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். 21 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக பணிபுரிந்து வந்த நிலையில், செட்டிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான தன்யா என்பவரை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 4 ஆம் தேதி தன்யாவுக்கு பிறந்த நாளான நிலையில், வாழ்த்து சொல்ல நள்ளிரவு நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு சென்ற பிரசாந்த், பெண்ணின் உறவினரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அன்றிரவே வீட்டிலிருந்த சாணி பவுடரை குடித்து தன்யா தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.