செல்பி எடுக்க துள்ளிக்குதித்த லிட்டில் பிரின்சஸ்.. டென்ஷனாகி துரத்திவிட்ட கோபக்கார போலீஸ்.. சென்னை கடற்கரையில் சம்பவம்

x

சென்னை பட்டினப்பாக்கத்தில், ஆபத்தை உணராமல் கடல் சீற்றத்தை காண பொதுமக்கள் குவிந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும், சில இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், கடல் சீற்றத்தைக் காண பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஏறாளமானோர் குவிந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் எச்சரிக்கை விடுத்தும், மீண்டும் மீண்டும் சிலர் கடற்கரைக்கு சென்று, செல்பி எடுத்த‌னர். காவல்துறைக்கு சிரமம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருவது முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்