உலகையே ரஷ்யாவை நோக்கி பார்க்க வைத்த தலைவன்...அப்படி என்ன செய்தார் விளாடிமிர் லெனின்!

x

ரஷ்ய புரட்சியின் நாயகரும், சோவியத் ஒன்றியத்தின் நிறுவனத் தலைவருமான விளாடிமிர் லெனின் பிறந்த தினம் இன்று.

1870 ஏப்ரல் 22ல் சிம்பிர்ஸ்க்கில் பிறந்த லெனின், இளம் வயதிலேயே மார்க்சியத்தில் ஈடுப்பாடு கொண்டிருந்தார். ரஷ்யாவின் ஜார் மன்னருக்கு எதிராக ஆயுத போராடத்தில் ஈடுப்பட்ட அவரின் சகோதரர் அலெக்சேண்டருக்கு 1887ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டக் கல்வி பயின்று கொண்டிருந்த லெனில், இதனால் முழு நேர புரட்சியாளாராக மாறினார். தொழிலாளர் விடுதைலை இயக்கத்தை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார். 1895ல் கைது செய்யப்பட்டு சைபீரியா விற்கு நாடு கடத்தப்பட்டார்.

1,900இல் விடுதலை செய்யப்பட்ட லெனின், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, ரஷ்ய புரட்சிக்கு ஆதரவு திரட்டினார். பின்னர், 1903ல் ரஷ்ய சமூக ஜனநாயத் தொழிலாளர் கட்சியை தொடங்கினார்.

1905ல் ரஷ்யவில் நடந்த முதல் புரட்சி தோல்வியடைந்த பின், நாடு திரும்பிய லெனின், பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகி, தனது புரட்சிகர பரப்புரையை தொடர்ந்தார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை தொடர்ந்த லெனின், பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு, இதர புரட்சியாளர் களை ஒன்று திரட்டினார். லண்டன் அருகாட்சியக

நூலத்தில் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு மார்க்சிய நூல்களை எழுதினார்.

1914ல் முதல் உலகப் போர் தொடங்கிய பின், சுவிட்சர் லாந்தின் ஜூரிச் நகருக்கு இடம் பெயர்ந்தார். 1917ல் போரினால் ரஷ்யா பலவீனமடைந்த பின் நாடு திரும்பினார்.

1917ல் தொழிலாளிகள், விவசாய தொழிலாளர்களை ஒன்று திரட்டிப் புரட்சி நடத்தினார். 1917 மார்ச்சில் ஜார் மன்னரை யும், 1917 நவம்பரில் ரஷ்ய முதலாளிகள் - நிலப்பிரபுக்களின் இடைக்கால அரசையும் மக்கள் புரட்சி வீழ்த்தியது. புரட்சி வென்ற பிறகு உலகின் முதல் சோஷலிச அரசின் தலைவரானார் லெனின்.

ரஷ்யாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு லெனின் கடுமையாக உழைத்தார். கல்வி, சுகாதாரம், அறிவியல், வேளாண்மை, தொழில் என அனைத்துத் துறைகளிலும் ரஷ்யா மேம்பட புதிய திட்டங்களை உருவாக்கினார்.

1924ல் தனது 54 வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்


Next Story

மேலும் செய்திகள்