தமிழகத்தையே பரபரப்பாக்கிய 'கூவத்தூர்' வீடியோ.. போலீஸ் ஸ்டேஷனில் அட்ராசிட்டி செய்தவர் சொன்ன பகீர் தகவல்

x

மதுபோதையில் காவலர்களை ஒருமையில் பேசி அட்டகாசம் செய்தவர், காலில் மாவுக்கட்டுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்தது என்ன பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சரியை சேர்ந்தவர் நாகராஜ். 32 வயதான இவர், மதுபோதையில் கிழக்கு கடற்கரை சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், நாகராஜை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது, போலீசாரை ஒருமையில் பேசிய நாகராஜ், காவலர்களிடம் அத்துமீறி தெனாவெட்டாக துள்ளிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது..

இதையடுத்து, நாகராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவர், காலில் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெறும் வீடியோ இணையத்தில் பரவியது.

இதில், கூவத்தூர் காவல்நிலைய ரைட்டர்தான் தன்னை தாக்கியதாகவும், காவலர்கள் தன்னை காலணியால் மிதித்து சித்ரவதை செய்ததாகவும் அவர் சுமத்திய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்