'தி கேரளா ஸ்டோரி' படம் - உ.பி முதல்வர் ட்வீட்
சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு, உத்தர பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி, இப்படம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத அமைப்புகளில் ஈடுபடுத்தப்படுவதாக, இப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, இப்படத்திற்கு மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story