திருமணமான பின் கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு ஆப்பு வைத்த ஐகோர்ட் - சந்தோஷத்தில் கள்ளக்காதலன்
கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் உறவில் இருந்து விலக முயன்ற போது, அந்நபர் சம்மதிக்காமல் தற்கொலைக்கு முயல்வதாக மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, அப்பெண் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் மனு அளித்தார். இது தொடர்பான விசாரணையில், சம்பந்தப்பட்ட ஆண் திருமணம் ஆனவர் என தெரிந்த பின்னர், திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் பெண் அவருடன் தொடர்பில் இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது பாலியல் வன்கொடுமை ஆகாது எனக் கூறி, பாலியல் வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story