"The Kashmir Files.. இழிவானது.. வெறுப்புணர்வை பரப்பும் படம்" - கோவா திரைப்பட விழாவில் சர்ச்சை

x

தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் படம் என கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளார். கோவா மாநிலம் பானாஜியில் நடைபெற்ற 53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்த‌து. விழாவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான படம் என தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் விமர்சித்துள்ளார். மேலும், பிரச்சார தன்மை கொண்டதாக‌க் கூறிய அவர், அதிருப்தியை தெரிவித்தார். அவரது இந்த பேச்சை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்