செந்தில் பாலாஜி வழக்கை கையில் எடுக்கும் நீதிபதி - யார் இந்த சி.வி.கார்த்திகேயன்? - பின்னணி என்ன?

x

செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி கள் இருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து, வழக்கில் 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன்..

சென்னையில் ஆறாவது தலைமுறையாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை கொண்ட குடும்பத்தில் 1964 டிசம்பரில் பிறந்தவர்.

திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தவர், தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் புள்ளியியலில் இளநிலை அறிவியல் பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுநிலை படிப்பையும் படித்தவர்.

1989 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் வி.எஸ். சுப்பிரமணியனிடம் ஜூனியராக சேர்ந்தார். 2005 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று ராமநாதபுரத்தில் பயிற்சியை தொடங்கியவர். புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றியவர்.

நீதித்துறையில் பலமுக்கிய பொறுப்புகளை வகித்தவர், 2016 மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்...

கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார். 2020-ல் புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உத்தரவிட்டார்.

ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தவர்.

கொரோனா பணியில் இறந்த முன்களப் பணியாளர்களின் உறவினர்கள் மத்திய அல்லது மாநில அரசில் ஏதாவது ஒரு அரசிடமே இழப்பீடு பெற முடியும் எனவும் இரு அரசுகளிடம் இருந்து நிவாரணம் கோர முடியாது எனவும் உத்தரவிட்டவர்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க உத்தரவிட்டவர்.

உபரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்த வழக்கில், கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, வசதியான இடத்தில் பணியை பெறுவது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தவர்.

செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த வழக்கில், முன்னாள் பாஜக நிர்வாகி நிர்மல்குமார் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பேச தடை விதித்தவர்.

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே சி பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்தவர்.

கொரோனா வைரசை குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக கூறி, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் விதித்தவர்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன் யார்... ?

6-வது தலைமுறையாக வழக்கறிஞர்கள், நீதிபதிகளை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்

திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி படிப்பு

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் புள்ளியியலில் இளநிலை அறிவியல் பட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுநிலை படிப்பு

1989- வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞர்

வி.எஸ். சுப்பிரமணியனிடம் ஜூனியராக பணி

2005-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி

ராமநாதபுரத்தில் நீதிபதியாக பயிற்சி

புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிபதி

2016 மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி




Next Story

மேலும் செய்திகள்