குடிநீர் தொட்டியில் கழிவு நீர் கலந்த விவகாரம் - "மாநில உயர் நீதிமன்றத்தை ஏன் நாடவில்லை?"

x

பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாகவும், இந்த விவகாரத்தை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே. கௌல் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மாநில உயர் நீதிமன்றத்தை ஏன் நாடவில்லை என கேள்வி எழுப்பியது. இதையடுத்து பொதுநல மனுவை திரும்பப்பெற அனுமதியளித்து மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்