சிறுவர்களுக்கு மிட்டாய் வழங்க மறுத்த விவகாரம்..பள்ளியில் சாதிய பாகுபாடு உள்ளதா?அறிக்கையில் பரபரப்பு
சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சாதிய பாகுபாடு பின்பற்றப்படவில்லை என மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் சமர்ப்பித்த அறிக்கையால் பரபரப்பு...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சாதிய பாகுபாடு பின்பற்றி வருவதாக பள்ளி நேற்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர். விசாரணையில் இறங்கிய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
அதற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பணிபுரியும் ஆசிரியர்கள் அருள்ராஜ் தான் இந்த பள்ளியில் நான்காண்டுகளாக பணிபுரிந்து வருவதாகவும் தற்போது வரை எந்தவித சாதிய பாகுபாடு இன்றி பெஞ்ச் இல்லாததால் அனைத்து மாணவர்களையும் தரையில் ஒன்றாக அமர வைத்து வகுப்பு நடத்தி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்..
இதேபோல் அங்குள்ள சத்துணவு அமைப்பளாராக பணிபுரியும் பரிசுத்தமாள் அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமாக உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் அளித்துள்ளார்.
பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர் அளித்த தகவல்களை மாவட்ட ஆட்சியருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நல அலுவலர் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள பள்ளியில் எந்தவித சாதிய பாகுபாடு இன்றி நடைபெற்று வருவதாக அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார்..
ஆனால் அததி திராவிடர் மற்றும் பழங்குடியின மாவட்ட நல அலுவலர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பாஞ்சாகுளம் கிராம காலனி பகுதியில் உள்ள மக்களை சந்தித்து விசாரணை செய்த போது மாணவர்கள் பயிலும் பள்ளியில் சாதிய பாகுபாடு இருப்பதாக அனைவரின் முன்னிலையில் கூட்டத்திலேயே பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு முரண்படக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்...