பாதிரியார் ஆன்டோ விவகாரம்... போலீசார் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

x

கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்தவர் தேவாலய பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. இவரின் லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டு, பாதிரியாரின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் மீது பாலியல் வழக்கில் புகாரளித்த நிலையில், தப்பியோடிய பாதிரியாரை போலீசார் தேடி வந்தனர். இதில், தலைமறைவாக இருந்த பாதிரியாரை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் உட்பட 4 பேர் பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து புகாரளித்துள்ளனர். இதனிடையே, மேலும் பலர் புகாரளிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்கலாம் என்றும், புகராளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்