வாலிபரை முத்தமிட்ட விவகாரம்... இளைஞர் கொலை..! இளம்பெண்ணுக்கு மரண தண்டனை... கடைசியில் வந்த திடீர் உத்தரவு
இளைஞரை முத்தமிட்டதால் விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய சம்பவம் சூடானில் நிகழ்ந்துள்ளது.
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடான் நாட்டில் விபச்சாரம், திருட்டு ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் திருமணமாகி விவாகரத்தான 20 வயது இளம்பெண், இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்த அப்பெண்ணின் உறவினர், அந்த இளைஞரை கொலை செய்துள்ளார்.
அந்த பெண் மீதும் விபச்சார வழக்கு பதியப்பட்டு, கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், அப்பெண்ணுக்கு மரண தண்டனை நீக்கப்பட்டு, 6 மாத சிறை தண்டனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
Next Story