குழந்தை உடலை 10 கி.மீ தூக்கி சென்ற விவகாரம்... பார்க்க சென்ற கலெக்டர்.. வழியில் சிக்கிய கார்

x

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலை கிராமத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒன்றரை வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த‌து.

சாலை வச‌தி இல்லாத‌தால் குழந்தையின் உடலை அவரது தாயார் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சென்றனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியரின் கார் மலை பாதையில் சிக்கி கொண்டது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் மலை கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர், உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்