தென்னந்தோப்பால் வந்த பிரச்சினை...டிராவல்ஸ் அதிபர் வெட்டி படுகொலை - மதுரையை நடுங்க வைத்த சம்பவம்
மேலூர் அருகே டிராவல்ஸ் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்.
டிராவல்ஸ் அதிபரான இவருக்கு சொந்தமான தென்னந்தொப்பு, மேலூர் அருகே உள்ள சாம்பிராணி பட்டி கிராமத்தில் உள்ளது.
இந்த தென்னந்தோப்பு வாங்கியது தொடர்பாக, இவருக்கும் பக்கத்து நிலத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தென்னந்தோப்பிற்கு வந்த சுரேஷை, கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் வெட்டிப் படுகொலை செய்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரகாசத்தை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
இது ஒரு புறமிருக்க, கோபாலகிருஷ்ணன், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் என்பதும், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.