சிறை கைதிக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல், வலிப்பு.. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

கோவையில் சிறையில் கைதி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவருக்கு மூச்சுத்திணறலும், வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு மாதேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்