நாட்டையே உலுக்கிய சம்பவம்.. சாட்சி சொல்ல போகும் 150 பேர்
கேரள மாநிலம், இலந்தூர் இரட்டை நரபலி வழக்கில் கொச்சி நகர காவல்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளது.
கேரள மாநிலம் இரட்டை நரபலி வழக்கில் முகமது ஷாபி மற்றும் மருத்துவ தம்பதிகளான பகவல்சிங் மனைவி லைலா ஆகிய மூவரும் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் போலீசார், குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஷாபி சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 150 சாட்சிகள் இடம்பெற்றுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது, கொலை, கடத்தல், சதித் திட்டம், சடலத்தை அவ மரியாதை செய்தல், திருட்டு உள்ளிட்ட பல குற்றங்களை விசாரணைக்குழு சாட்டியுள்ளது.
வழக்கில் நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால், சூழ்நிலை ஆதாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
பத்மாவை கொன்ற பிறகு, நர மாமிசம் சாப்பிட்டதாக கூறியதால் இது அரிதான வழக்காக பார்க்கப்படுகிறது.