9ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 11ஆம் வகுப்பு மாணவன் - தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி

x

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில், 9-ம் வகுப்பு மாணவிக்கு, பிளஸ்-ஒன் மாணவன் தாலி கட்ட முயற்சித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 11-ம் வகுப்பு மாணவன், அதே பகுதியில் மற்றொரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், அந்த மாணவிக்கு திடீரென தாலி கட்ட முயன்றுள்ளான். சுதாரித்துக்கொண்ட மாணவி, கூச்சலிட்டபடி ஓடியுள்ளார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால், அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். தகவலின் பேரில் வந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்