வீட்டுக்கு போக பஸ் இல்லை..அரசு பஸ்ஸை எடுத்து குடிமகன் ஒரே ஜூட் - போற வழிலேயே சம்பவம் | Karnataka

x

வீட்டிற்கு செல்ல பேருந்து கிடைக்காததால், நிறுத்தி வைத்திருந்த அரசு பேருந்தை, மது போதையில், ஒருவர் எடுத்துச் சென்ற ருசிகர சம்பவம், கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

பீதர் மாவட்டத்தின் அவுராத் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் சூரியவம்சி என்பவர், பணி முடிந்து மது அருந்தி உள்ளார். பின்னர் சொந்த கிராமத்திற்கு செல்ல அவுராத் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.தனது ஊருக்கு செல்லும் பேருந்து ஏற்கனவே புறப்பட்டு சென்றுவிட்டது தெரியவந்தது.

சற்று நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த சூரியவம்சி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு அரசு பேருந்த எடுத்துக்கொண்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மது போதையில் பேருந்தை சரிவர இயக்க முடியாமல் தடுப்பு சுவரின் மீது விபத்தை உண்டாக்கியுள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போதையில் அரசு பேருந்தை ஊருக்கு எடுத்துச் செல்ல முயன்றது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்