சென்னையில் ஒரு நாள் பட பாணியில் கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..- 17 வயது சிறுமிக்காக பறந்த ஆம்புலன்ஸ்
கேரளாவில் சிறுமியை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச்செல்லும் வகையில், அமைச்சர் உதவி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், கட்டப்பனை பகுதியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக சிறுமியை மற்றொரு மருத்துவமனைக்கு விரைவாக மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த அமைச்சர் ரோஷி அகஸ்டின், ஆம்புலன்ஸ் மருத்துவமனையை விரைவாக சென்றடையும் வகையில், போக்குவரத்தை எளிதாக்க அறிவுறுத்தினார். இதனால், சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Next Story