கணவரின் உடல்.. இல்லையென்றால் புகைப்படமாவது வேண்டும்.. - மனைவியின் கண்ணீர் மல்க மனு | Ramanathapuram
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டுத்தருமாறு, அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
வலையர்வாடி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், பக்ரைன் நாட்டில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, விசைப்படகு விபத்தில் உயிரிழந்தார்.
இந்தநிலையில் கணவரின் உடலை மீட்டு கொண்டு வர வேண்டுமெனவும், குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் செந்தில்குமாரின் மனைவி, ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கணவரின் உடலை கொண்டுவர முடியாவிட்டால், உடலை புகைப்படம் எடுத்தாவது அனுப்ப வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story