மனைவியை மீட்க சென்ற கணவர் - குறுக்கே நின்ற மாமியார், மருமகன் நடத்திய பயங்கரம்

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, குடும்பத்தகராறில், மாமியார் உட்பட 2 பேரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவர், தனது மகள் ஜோதிமணியை, பழனியை சேர்ந்த ஆறுமுகத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜோதிமணி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியை அழைத்து செல்வதற்காக, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு ஆறுமுகம் வந்தபோது, மாமியார் காமாட்சி, அவரது உறவினர் ஈஸ்வரன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மறைத்து வைத்திருந்த கத்தியால் காமாட்சி மற்றும் ஈஸ்வரனை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்