மருத்துவமனைக்குள் மனைவியை குத்திக் கொன்ற கணவர் - நடுரோட்டில் கத்தியோடு சென்ற கொடூரம்

x

கோவையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு, கத்தியுடன் கணவன் நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த நான்சி, வினோத் தம்பதியினர், குடும்பச்சண்டை காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி, நான்சி செவிலியராக பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.

அப்போது தான் வைத்திருந்த கத்தியால் நான்சியை 9 இடங்களில் சரமாரியாக குத்திய நிலையில், சம்பவ இடத்திலேயே நான்சி உயிரிழந்துள்ளார்.

நான்சியின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் வினோத்தை பிடித்து அறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கத்தியுடன் குப்புசாமி நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்