நாட்டு மருந்து கொடுத்த கணவன்.. வாங்கி குடித்த கர்ப்பிணி-தாய்,சிசு உயிரை பறித்த மாமியாரின் நயவஞ்சகம்
குண்டூர் அருகே நரசராவ் பேட்டையை சேர்ந்தவர் வேனு.
இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன் சிவரஞ்சினி என்பவருடன் திருமணமானது.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சிவரஞ்சினி ஆறுமாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், சிவரஞ்சினியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவருடைய கணவர், அங்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதத்ததில் பெண் குழந்தை என தெரிய வர வீட்டிற்கு வந்து தன் தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, சிவரஞ்சினியின் கணவரும், மாமியாரும் கருவை கலைக்க முடிவெடுத்துள்ளனர்.
இதில், நாட்டு வைத்தியம் என கூறி கருவை கலைப்பதற்காக சிவரஞ்சினிக்கு விஷம் அளித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கருவில் உள்ள குழந்தையும், சிவரஞ்சினியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவரஞ்சினியின் பெற்றோர்கள் போலீசில் புகாரளித்தனர்.
இதையடுத்து, சிவரஞ்சினியின் கணவர் மீதும், அவருடைய தாயார் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவ்விவகாரத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என ஒரு மருத்துவமனை எவ்வாறு தெரிவிக்காலம் என கூறி மருத்துவமனை நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்பட்டது.