ஒன்றாக அமர்ந்து குடித்த கணவன்- மனைவி .. தலைக்கேறிய போதையில் வெறிச்செயல்

x

திண்டுக்கல்லில், நடத்தையில் சந்தேகப்பட்டு, 2வது மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவன், நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நிலக்கோட்டையை சேர்ந்த மதுரை வீரன் என்பவருக்கு வீரம்மாள் என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், அவரை விட்டு பிரிந்துள்ளார். அதன்பிறகு, கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்த மதுரை வீரனுக்கு, அதே பகுதியில் உணவகத்தில் பணியாற்றி வந்த சித்ரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்தார். சித்ரா அடிக்கடி போனில் பேசி வந்ததை சந்தேகித்த மதுரை வீரன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவன் மனைவி இருவரும் மதுபோதையில் இருந்ததால், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, மதுரைவீரன் கத்தரிக்கோலால் சித்ராவின் வயிற்றில் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நிலக்கோட்டைக்கு சென்ற மதுரை வீரன், அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்