"வீட்டை சூறையாடிட்டாங்க.. உயிருக்கு பாதுகாப்பு இல்ல" - கள்ளக்குறிச்சியில் கதறும் தாய்

x

கள்ளக்குறிச்சி அருகே சொத்து பிரச்சினையில், இளைஞர்கள் வீட்டை அடித்து சூறையாடியதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவருக்கும், அவரது அண்ணன் மகன் திருமாவளவன் என்பவருக்கும் இடையே 76 சென்ட் நிலத்தை பங்கிட்டு கொள்வது சம்பந்தமாக, பிரச்சனை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக மணிமாறன் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதற்கிடையில் திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மணிமாறன் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார். இதை மணிமாறனின் மகள் வீடியோ எடுத்த நிலையில், அவரையும் மிரட்டியதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்