நடைபயிற்சி சென்ற போது ஏற்பட்ட பயங்கரம்... எமனாக வந்து பின்னால் மோதிய கார் - சிசிடிவி காட்சிகள்
மகாராஷ்டிராவில் மருத்துவர் ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது கார் மோதிய விபத்தில் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலேவாடி பி.ஆர்.டி லைன் பகுதியில் 47 வயதான பலிராம் காத்வே எனும் மருத்துவர் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று பலிராம் மீது பலமாக மோதியதில் அவர் பல அடி உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரைக் காவல்துறையினர் தேடி வரும் நிலையில், விபத்து பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story