கோரமண்டல் கோரத்தின் கொடூரம்.. கேட்பாரற்று கிடக்கும் சடலங்கள்!! - திணறும் ஒடிசா மருத்துவமனைகள்..

x

ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதால் பிணவறைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மாவட்ட தலைமையகமான பாலசோரில் வைக்கப்பட்டிருந்தன. உரிமை கோரப்படாத ஏராளமான சடலங்கள் பிணவறைகளில் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக 187 சடலங்கள் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டன. எனினும் அங்கும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் 110 உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய உடல்கள் பிற தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் அடையாளம் காணப்படும் வரை, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில், சடலங்களை பாதுகாக்க சவப்பெட்டிகள், ஐஸ் மற்றும் ஃபார்மலின் ரசாயனங்கள் வாங்கப்பட்டுள்ளன. கோடை வெயில் கடுமையாக உள்ள நிலையில், உடல்களை பாதுகாப்பது கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிணவறைகளில் இடநெருக்கடி காரணமாக, சில உடல்கள் குளிர்பதனக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்