காதலனை துடிக்க துடிக்க கொன்று புதருக்குள் வீசிய பயங்கரம்..பள்ளிக்கால காதலால் நடந்த கொடூரம்

x

தேனியில் மாயமான 17 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தேனி மாவட்டம் போடி அருகே பூதிப்புரம் கிராமம் வீரச்சின்னம்மாள் புரத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவர் காமேஸ்வரன். அருகில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கிறார்....

சிறுவரின் தந்தை திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருவதாக கூறப்படும் நிலையில், காமேஸ்வரனின் தாயும் , தாய்மாமனும் அவரை அடுத்த கட்டமாக கல்லூரியில் சேர்ப்பதற்கான வேலைகளை பார்த்து வந்தனர்...

இந்நிலையில், வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பிய காமேஸ்வரன், இரவு வரை வீடு திரும்பவில்லை எனவும், அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை எனவும் கூறி அவரின் தாய் போலீசில் புகாரளித்தார்...

இதனடிப்படையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சிறுவனை பல இடங்களில் தேடி வந்துள்ளனர்...

அப்போது, வீரசின்னம்மாள் கிராமத்தில் கர்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே இரு சக்கர வாகனம் ஒன்று இரண்டு நாட்களாக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது...

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாழடைந்த கிணற்றின் அருகே இரு சக்கர வாகனம் இருப்பதை கண்டு, அருகில் உள்ள இடங்களில் சோதனை செய்த போது சிறுவன் ஒருவன் கழுத்தறுக்கப்பட்டு தலை திருகிய நிலையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

உடனே, காமேஸ்வரனின் தாய்மாமன் சுப்புரத்தினத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட நிலையில், அவர் தோட்டத்தில் வந்து கொண்டிருந்த போதே அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை கண்டு நெஞ்சம் பதைபதைத்து போனார்...

அந்த வாகனம் காமேஸ்வரனுடையது என்பதை அறிந்ததால் பரபரப்புடனே காணப்பட்ட அவர், காமேஸ்வரன் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

சிறுவனின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், இது குறித்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

சிறுவர் காமேஸ்வரனுக்கு பள்ளியில் படித்து கொண்டிருந்த போது, அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது..

இதையறிந்த மாணவியின் தரப்பினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் காமேஸ்வரனின் வீட்டிற்கு மூன்று முறை வந்து கண்டித்து சென்றதாகவும் கூறப்படுகிறது...

இந்நிலையில், காதல் விவகாரத்தில் மாணவியின் தரப்பினர்தான் காமேஸ்வரனை கொன்றதாக சிறுவனின் தாய் மற்றும் தாய்மாமன் தெரிவித்திருந்த நிலையில், மாணவியின் தரப்பினரை போலீசார் விசாரணை நடத்த சென்ற போது அவர்கள் தலைமறைவானதாக தகவல் வெளியாகி பரபரப்பானது...

உடனே, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், குற்றம்சாட்டப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரனை தேடிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

விசாரணையில், காமேஸ்வரன் கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லையென திட்டவட்டமாக மறுக்கும் இருவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்