இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள்..ஒவ்வொருத்தருக்கும் இவ்ளோ கோடியா..கேட்டா ஆடி போயிடுவீங்க

x

இந்தியாவில் மிக அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலை Forbes நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை

இந்தத் தொகுப்பு அலசுகிறது.

இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் அளவை நோக்கி வேகமாக முன்னேறி வரும் நிலையில், டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. 8,200 கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்டவர் கள் டாலர் பில்லியன்ர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

கார்ப்பரேட்களின் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளங்களும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

முதல் இடத்தில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தியரி டெலபோர்ட்டோவின் ஆண்டு சம்பளம் 2022-23ல் 82 கோடி ரூபாயாக இருந்தது.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக், 56.44 கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்துடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

டி.சி.எஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன், 29.16 கோடி ரூபாய் பெற்று, மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஹிந்துஸ்த்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, கடந்த மாதம் வரை பதவி வகித்த சஞ்சீவ் மேத்தா, ஆண்டு சம்பளமாக 22.36 கோடி ரூபாய் பெற்று, நான்காம் இடத்தை பிடித்தார்.

இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான புனித் சாட்வால், 18.2 கோடி ரூபாய் ஆண்டு சம்பளமாக பெற்று, ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

இவர்களின் ஆண்டு சம்பளத்தில், போனஸ் மற்றும் கமிஷன் தொகை பெரும் பங்கு வகிக்கிறது. இவர்களின் நிர்வாகத்தில் உள்ள நிறுவனங்கள் ஈட்டும் நிகர லாபத்திற்கு ஏற்ப, போனஸ் மற்றும் கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதிக சம்பளம் பெறும் இந்தியாவின் டாப் 5 CEOக்கள்

1.தியரி டெலபோர்ட்டோ

விப்ரோ நிறுவன CEO

ஆண்டு சம்பளம் -

2022-23 - ரூ.82 கோடி

2.சலீல் பரேக்

இன்போசிஸ் CEO

ஆண்டு சம்பளம் -

2022-23 - ரூ.56.44 கோடி

3. ராஜேஷ் கோபிநாதன்

டி.சி.எஸ் CEO

ஆண்டு சம்பளம் -

2022-23 - ரூ.29.16 கோடி

4.சஞ்சீவ் மேத்தா,

ஹிந்துஸ்தான் யுனிலீவர்

ஆண்டு சம்பளம் -

2022-23 - ரூ.22.36 கோடி

5.புனித் சாட்வால்

இந்தியன் ஹோட்டல்ஸ்

ஆண்டு சம்பளம் -

2022-23 - ரூ.18.2 கோடி

நிறுவனங்களின் நிகர

லாபத்திற்கு ஏற்ப,

போனஸ், கமிஷன்

தொகை நிர்ணயம்



Next Story

மேலும் செய்திகள்