அம்மன் பாடல்களின் நாயகி எல்.ஆர். ஈஸ்வரி... 'இறை பக்தி' கொண்ட மனங்களை வென்ற 'இசை சக்தி'

x

ஆடி மாதம் பிறந்ததும்.... பல பக்தர்களை பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் எல்.ஆர் ஈஸ்வரியை எப்படி மறக்க முடியும் ? அது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.

60 மற்றும் 70களில் கலக்கிய 'கவர்ச்சி குரல் குயில்' பிற்காலத்தில் 'அம்மன் பாடல்களின் நாயகி' யான கதையை இன்றைய தலைமுறையினர் நிச்சயம் அறிந்திருக்க மாட்டார்கள்...

இவரது பாடல் இல்லாமல் அவர்களின் பெற்றோரது திருமணம் நிச்சயம் நடைபெற்று இருக்காது...

நடிகைகள் காட்டும் எக்ஸ்பிரஷனை விட.... பாடல்களில் இவரது குரலில் வெளிப்படும் எக்ஸ்பிரஷன்கள்... வேற ரகம்!

இப்படி இவருக்குள் இருந்த 'இசை சக்தி'... 'இறை பக்தி' கொண்ட பக்தர்களின் மனங்களிலும் குடி புகுந்ததற்கு காரணம்... பக்தி மனம் கமலும் அவரது தெய்வீக பாடல்களால் தான்.

அதிலும் ஆடி மாதம் பிறந்து விட்டால் போதும்.... ஊர் தோறும் காவல் தெய்வமாக மாரியம்மனை வழிபடும் மக்கள் நிறைந்த தமிழகத்தில்.... இவரது பாடல் ஒலிக்காத திசையே இருந்து விட முடியாது.

அம்மனைப் பற்றி எத்தனை பக்தி பாடல்கள் பாடப்பட்டாலும்.... 'அம்மன் பாடல்களின் நாயகி'யான இவரது பாடல்கள் தான் ஆடி மாதம் பிறந்ததும்.... பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் பாடல்களாக இருக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்