விடாமல் பொளந்து கட்டும் கனமழை..! வெள்ளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு

x

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது... பானூரில் கல்லூரி மாணவர்கள் மூவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு வடகரையில் 17 வயது மாணவர் மின் கம்பி அறுந்து விழுந்து பலியானார். பாறசாலையில் வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியின் போது 68 வயது முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அதேபோல், தோழிக்கோடு குளத்தில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவரும், ஐம்பனத்தில் வெள்ளத்தில் சிக்கி 83 வயது மூதாட்டியும் பலியாகினர். பல பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல மாவட்டங்களில் ஏராளமான குடும்பங்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்