மாணவனை கண்மூடித்தனமாக அடித்த ஹெட்மாஸ்டர்.. அச்சு போல் உடம்பில் பதிந்த காயம் | Chennai

x

சென்னை அருகே மாணவனை தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறி, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை பனையூர் உத்தண்டியில் தோட்ட காவலாளியாக பணிபுரிபவர் எபினேசர். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், கெவின் என்ற மகனும் உள்ளனர். கெவின், கோவளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கெவினை தலைமை ஆசிரியர் ராஜசேகர் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த,

கெவின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் தலைமை ஆசிரியர் ராஜசேகரை விசாரணைக்காக கேளம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்