மணப்பெண்ணுக்கு முதலிரவில் "கன்னித்தன்மை" டெஸ்ட் வைத்த மாப்பிள்ளை குடும்பம் - அடுத்து நடந்த பயங்கரம்.. வெளியான பகீர் தகவல்
ராஜஸ்தானில், கன்னித்தன்மை சோதனையில் தோல்வி அடைந்ததால், திருமணம் ஆன நாளன்றே மணப்பெண்ணை சரமாரியாக தாக்கியதுடன், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கணவர் மற்றும் குடும்பத்தாரை போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தானின் பில்வாரா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, கடந்த மே 11ம் தேதி, திருமணம் நடந்துள்ளது. அந்த நாளிலேயே, கணவரின் குடும்பத்தார், அப்பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளனர். கன்னித்தன்மை சோதனையில் தோல்வி அடைந்ததால், அப்பெண் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் சரமாரியாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கிராம பஞ்சாயத்தைக் கூட்டி, பெண் வீட்டாரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கேட்டும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான தகவல் போலீசாருக்கு தெரியவரவே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருமணத்திற்கு முன்பாக, வீட்டின் அருகில் வசிக்கும் நபர், தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுதொடர்பாக அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த உண்மையை தனது மாமியாரிடம் கூறியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல், சித்திரவதை செய்து வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.