விடாமுயற்சியின் இலக்கணம்.. தீரா வேட்கையாளன்.. நடிப்பு அரக்கன் - வாழ்க்கையை வரலாறாக்கிய விக்ரம்..!

x

நடிகர் விக்ரம் தனது 57வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... நடிப்பின் நாயகன் விக்ரமைப் பற்றிய ஒரு சுவையான தொகுப்பைக் காணலாம்...

"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி" என்றால் அது விக்ரமுக்குத் தான் பொருந்தும்...'

நடிப்புக்காகத் தன்னை எந்த எல்லைக்கும் வருத்திக் கொள்ளக் கூடிய மாபெரும் கலைஞன்...

திரையுலகில் பலருக்கும் எட்டித் தொடும் தூரத்தில் வாய்ப்புகள் இருக்க... நம்பிக்கையை ஏணியாய்க் கொண்டு எட்டாக் கனியான வாய்ப்பைப் பறித்து, கடின உழைப்பால் அதை வெற்றிக் கனியாக மாற்றியவர் தான் விக்ரம்...

திரைப்பயணத்தின் துவக்கத்தில் கரடு முரடான பாதைகளைக் கடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது விக்ரமுக்கு... நடிப்பு கைகொடுக்காமல் போகவே பல திரைப்படங்களில் பின்னணி குரலாய் ஒலித்தார் விக்ரம்...

தன் திறமையை நிரூபிக்க தீரா வேட்கையுடன் காத்திருந்த விக்ரமின் ஆர்வத்திற்கு தீனி போட்ட படம் தான் சேது...

தொடர்ந்து விக்ரம் நடித்த தில், ஜெமினி, தூள், சாமி என அனைத்து படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடித்தது...

காசி படத்தில் பார்வையற்றவராக நடித்து தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்த விக்ரம், பிதாமகனில் ஆடிய வெறியாட்டத்தை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்து விட முடியாது...

தெய்வத் திருமகளில் மனவளர்ச்சி குன்றிய தந்தையாய் நடித்த விக்ரமின் நடிப்பைக் கண்டு கண்ணீர் வடிக்காத மனம் கல்லால் ஆனதென்று தான் சொல்ல வேண்டும்...

விக்ரமுக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திய திரைப்படம் தான் "ஐ"... லிங்கேசனாக கலக்கிய விக்ரமின் நடிப்பைக் கண்டு அதிசயிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா?

தோற்றத்தில் ஒரு மன்னனைப் போலவே புஜ பல பராக்கிரமம் மிக்கவராய்த் திகழும் விக்ரமைக் காட்டிலும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்த்திட முடியாது என்பது பொன்னியின் செல்வனில் நிரூபணமாகி இருக்கும்...

நடிப்பில் இன்னும் பல உயரங்களைத் தொடக் காத்திருக்கும் சீயான் விக்ரமுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்வோம்...

57வது பிறந்த


Next Story

மேலும் செய்திகள்