அப்படியே பிளேட்டை திருப்பி போட்ட ஆளுநர்... ஏன் இந்த திடீர் மாற்றம்?

x

தமிழ்நாட்டில் சாலை வசதி மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதால் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் கல்வி அறிவு உயர் கல்வி படிப்பு தொடர்பு சதவீதமும் அதிகமாக இருப்பது மட்டுமே போதாது எனவும் திறன் மேம்பட்டிலும், திறனுடன் கல்வி கற்றலிலும் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார். தொழில்துறை பிரிவில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முன்னோடியாக உள்ளது எனவும் தமிழ்நாட்டில் சாலை வசதி மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதால் தொழில்துறைகள் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்