உண்டியல்ல விழுந்த தங்க செயின்..."திருப்பி கொடுங்க"- கெஞ்சிய பெண் - கோவில் நிர்வாகம் எடுத்த முடிவு
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த சங்கீதா என்பவர், முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, தனது கழுத்தில் இருந்த துளசி மாலையை கழற்றி உண்டியல் செலுத்திய போது, எதிர்பாராத விதமாக தான் அணிந்திருந்த ஒன்னே முக்கால் சவரன் தங்கச் செயினும் உண்டியலில் விழுந்தது. இதனிடையே, தங்கச் செயினை திரும்ப வழங்குமாறு கோயில் நிர்வாகத்திடம் சங்கீதா கோரிக்கை விடுத்தார். 1975இன் சட்டப்படி, உண்டியலில் விழுந்த பொருட்களை திரும்ப வழங்குவதற்கான வழிவகை இல்லாததால், பெண் பக்தரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், தனது சொந்த செலவில் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ஆயிரம் மதிப்பிலான தங்கச் செயினை வழங்கினார். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story